சர்பராஸ் கான் புறக்கணிப்பு: கவாஸ்கர் காட்டம் | ஜனவரி 20, 2023

தினமலர்  தினமலர்
சர்பராஸ் கான் புறக்கணிப்பு: கவாஸ்கர் காட்டம் | ஜனவரி 20, 2023

மும்பை: இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், பிப். 9ல் நாக்பூரில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் டில்லி (பிப். 17–21), தரம்சாலா (மார்ச் 1–5), ஆமதாபாத்தில் (மார்ச் 9–13) நடக்கவுள்ளன. முதலிரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை, சேட்டன் சர்மா தலைமையிலான பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு அறிவித்தது. இதில், உள்ளூர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சர்பராஸ் கான் 25, தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், ‘‘அணித் தேர்வின் போது வீரர்களின் உருவத்தை பார்க்கக் கூடாது. அவர்களது ‘பார்ம்’, திறமை, செயல்பாட்டை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ‘சிலிம்’ நபர்களை மட்டும் தேர்வு செய்ய விரும்பினால், ‘பேஷன் ஷோ’ சென்று சில மாடல்களை தேர்வு செய்யலாம். அவர்களிடம் ‘பேட்’, பந்தை கொடுத்து அணியில் சேர்த்துக் கொள்ளலாம். சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சர்பராஸ் கானுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காதது வியப்பாக உள்ளது. தொடர்ச்சியாக சதம் அடித்து வரும் இவர், கிரிக்கெட் போட்டிக்கு தகுதியானவர் என்பதை உணர்த்துகிறது,’’ என்றார்.

மூலக்கதை